இஸ்ரேலியர்களின் அட்டகாசம் – பாலஸ்தீனர்களின் விவசாய நிலங்கள் தீவைத்து எரிப்பு!
பாலஸ்தீனியர்களின் விவசாய கிடங்குகள், நிலங்களை இஸ்ரேலிய குடிமக்கள் சிலர் தீவைத்து எரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதில் பல பாலஸ்தீனியர்கள் காயமடைந்துள்ளனர்.
பாலஸ்தீனியர்கள் நகரங்கள் மற்றும் கிராமங்களைச் சுற்றியுள்ள தங்கள் விவசாய நிலங்களில் ஆலீவ் அருவடையை ஆரம்பித்துள்ளனர். இந்நிலையில் இஸ்ரேலியர்கள் சிலர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
துல்கார்மின் (Tulkarm) கிழக்கே ஒரு மலைப்பகுதியில் குறித்த தாக்குதல் முன்னெடுக்கப்பட்டதாகவும், முகத்தை மறைக்கும் உடையணிந்த சில ஆண்கள் தாக்குதலை முன்னெடுத்ததாகவும் கூறப்படுகிறது.
இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள பாலஸ்தீன அமைச்சர் முய்யாத் ஷாபான் (Muayyad Shaaban), இந்தத் தாக்குதல்கள் “மிரட்டல் மற்றும் பயங்கரவாதம் மூலம் ஒரு விரோதமான சூழலை” திணிக்கும் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாகும் என்றார்.
இதற்கிடையில் கலவரத்தை கலைக்கும் வழிமுறைகளைப் பயன்படுத்தி மோதலை கலைக்க” துருப்புக்கள் சம்பவ இடத்திற்குச் சென்றதாகவும், பல இஸ்ரேலிய பொதுமக்களை கைது செய்ததாகவும் இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் (IDF) தெரிவித்துள்ளன.
நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக இஸ்ரேலிய காவல்துறை தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.





