கபாதியா கிராமத்தில் பலஸ்தீனிய குடும்பங்களை இடமாற்றம் செய்த இஸ்ரேலிய படைகள்
இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சரின் உத்தரவின் பேரில், வடக்கு இஸ்ரேலில் உள்ள கபாதியா கிராமத்தில் படைகள் பெருமளவானோரை கைது செய்து, பல குடும்பங்களை அவர்களது வீடுகளிலிருந்து இடமாற்றம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இஸ்ரேலிய படைகள் கிராம நுழைவாயில்களை மூடி, சில வீடுகளை விசாரணை மையங்களாக மாற்றி, அந்த இடங்களில் வசிப்பவர்களை
இடம்மாற்றம் செய்தாக கூறப்படுகிறது.
இதேவேளை, கபாதியாவில் நடந்த கத்திக்குத்து மற்றும் கார்-மோதல் தாக்குதல்களில் ஈடுபட்ட சந்தேக நபர் தொடர்பில் உரிய விசாரணை மேற்கொண்டு, அதற்குப் பதிலாக நடவடிக்கை எடுக்கப்படும் இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இஸ்ரேலியர்களுக்கு எதிரான தாக்குதல்களில் ஈடுபட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்ட பாலஸ்தீனியர்களின் குடும்ப வீடுகளை இடிக்கும் இஸ்ரேலின் நடைமுறையை உரிமைக் குழுக்கள் நீண்ட காலமாகக் கண்டித்து வருகின்றன.
இந்த நடவடிக்கை சட்டவிரோத கூட்டுத் தண்டனை என்றும் உரிமைக் குழுக்கள் கூறுகின்றன.





