கிழக்கு ஜெருசலேம் அருகே தொழிலாளர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய இஸ்ரேலியப் படை
கிழக்கு ஜெருசலேமுக்கு(Jerusalem) வடக்கே உள்ள அர்-ராம்(Ar-Ram) நகரில் இஸ்ரேலியப் படைகளால் ஒரு பாலஸ்தீனிய நபர் சுட்டுக் காயமடைந்ததாக பாலஸ்தீனிய ரெட் கிரசண்ட்(PRCS) அமைப்பு தெரிவித்துள்ளது.
எல்லை அருகில் இஸ்ரேலியப் படைகள் ஒரு தொழிலாளர் குழுவைத் துரத்திச் சென்று துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், அவர்களில் ஒருவர் காயமடைந்ததாகவும் வஃபா(Wafa) செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
பாலஸ்தீனிய பொது தொழிற்சங்க கூட்டமைப்பின் கூற்றுப்படி, இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து இஸ்ரேலியப் படைகளால் 15 பாலஸ்தீனிய தொழிலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
அதே நேரத்தில் நூற்றுக்கணக்கானவர்கள் இஸ்ரேலிய காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு தவறாக நடத்தப்பட்டுள்ளனர்.
2023ம் ஆண்டு அக்டோபர் முதல், 42 தொழிலாளர் உயிரிழந்துள்ளதாகவும் 32,000க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பாலஸ்தீனிய தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.




