முதல் முறையாக காசா மருத்துவமனைக்குள் நுழைந்த இஸ்ரேலியப் படைகள்
காசாவில் உள்ள மிகப் பெரிய மருத்துவமனையான அல் ஷிஃபா மருத்துவமனையில் இஸ்ரேலியப் படைகள் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளன.
உள்ளூர் நேரப்படி அதிகாலை 2 மணியளவில் இஸ்ரேலியப் படைகள் மருத்துவமனை வளாகத்துக்குள் நுழைந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மருத்துவமனை வளாகத்தைச் சுற்றியுள்ள பகுதிகளைத் தாக்கி இஸ்ரேலியப் படைகள் மருத்துவமனைக்குள் நுழைவது இதுவே முதல் முறை.
அல் ஷிஃபா மருத்துவமனைக்கு அருகில் ஹமாஸ் அமைப்பின் கட்டளை மையம் இயங்கி வருவதாக அமெரிக்கா உள்ளிட்ட கட்சிகள் அறிவித்திருந்தன.
அதன்படி ஹமாஸ் போராளிகளை இலக்கு வைத்து இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது





