இஸ்ரேலிய மீட்க படைகள் தாக்குதல் – பாலஸ்தீன குழந்தைகள் இருவர் பலி
இஸ்ரேலியப் படைகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலில் பாலஸ்தீனியக் குழந்தைகள் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் மேற்குக்கரையில் உள்ள ஹெப்ரோன் (Hebron) நகரின் அருகே இடம்பெற்றுள்ளது.
பாலஸ்தீன மக்கள் தற்காலிகமாகக் குடியேறியுள்ள பகுதிகளில் இஸ்ரேலியப் படைகள் தொடர்ச்சியாகச் சுற்றிவளைப்புகளை மேற்கொண்டு வருவதாக பாலஸ்தீனத்தைச் சேர்ந்த உள்ளூர் ஆர்வலர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்தச் சுற்றிவளைப்புகளின்போது நடந்த தாக்குதலிலேயே இரண்டு குழந்தைகளும் உயிரிழந்துள்ளனர்.
மேலும், இந்தக் குடியிருப்புகளில் வசிக்கும் பாலஸ்தீன மக்களை அங்கிருந்து வெளியேறச் செய்வதை நோக்கமாகக் கொண்டே இஸ்ரேலியப் படைகள் இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இத்தாக்குதல், ஏற்கனவே பதற்றமான சூழலில் இருக்கும் மேற்குக்கரை பகுதியில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உயிரிழந்த குழந்தைகளின் குடும்பங்களுக்கு சர்வதேச மனித உரிமை அமைப்புகள் தங்கள் ஆழ்ந்த இரங்கலையும் கவலையையும் தெரிவித்துள்ளன.





