காசாவில் இராணுவ நடவடிக்கைகளை விரிவுப்படுத்தி கையகப்படுத்த இஸ்ரேலிய அமைச்சரவை ஒப்புதல்!

காசா பகுதியில் மோசமடைந்து வரும் மனிதாபிமான நிலைமைக்கு சர்வதேச அளவில் கண்டனம் எழுந்துள்ளது.
இந்நிலையில் காசாவில் இராணுவ நடவடிக்கைகளை மேலும் விரிவுப்படுத்த இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இஸ்ரேலில் வெள்ளிக்கிழமை அதிகாலை வரை பல மணி நேரம் நீடித்த அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு, பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் இந்த முடிவு அறிவிக்கப்பட்டது.
“ஹமாஸை தோற்கடிப்பதற்கான பிரதமரின் முன்மொழிவை பாதுகாப்பு அமைச்சரவை அங்கீகரித்துள்ளது” என்று இஸ்ரேலிய பிரதமர் அலுவலகம் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
“போர் மண்டலங்களுக்கு வெளியே உள்ள பொதுமக்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவதை உறுதி செய்யும் அதே வேளையில், காசா நகரத்தை கையகப்படுத்துவதற்கு ஐ.டி.எஃப் தயாராகும்.” எனவும் அவ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(Visited 1 times, 1 visits today)