காசா மீது இஸ்ரேல் தாக்குதல் – உயிரிழந்தோர் எண்ணிக்கை உயர்வு
போர் நிறுத்தத்திற்கு மத்தியில் காசாவில்(Gaza) இஸ்ரேல்(Israel) நடத்திய தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 29ஆக உயர்ந்துள்ளது.
வடக்கு மற்றும் தெற்கு காசாவில் உள்ள இடங்களை குறிவைத்து தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டதாகவும் இது அக்டோபர் மாதம் போர் நிறுத்தத்திற்குப் பிறகு நடத்தபட்ட மிகப்பெரிய தாக்குதல் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலில் காசா நகரில் உள்ள ஒரு அடுக்குமாடி கட்டிடம் மற்றும் கான் யூனிஸில்(Khan Younis) உள்ள ஒரு கூடார முகாம் ஆகியவை அடங்கும் என்று ஷிஃபா(Shifa) மருத்துவமனை தெரிவித்துளளது.
இரண்டு வெவ்வேறு குடும்பங்களைச் சேர்ந்த இரண்டு பெண்கள் மற்றும் ஆறு குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். மேலும், காசா நகரில் உள்ள ஒரு காவல் நிலையம் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்தி
போர் நிறுத்தத்திற்கு மத்தியில் காசாவை தாக்கிய இஸ்ரேல் – 12 பேர் பலி!





