ஈராக்கில் இருந்து ஏவப்பட்ட ட்ரோன்களை தடுத்து நிறுத்திய இஸ்ரேலிய ராணுவம்
ஈராக்கில் இருந்து இஸ்ரேலின் செங்கடல் நகரமான ஈலாட்டை நோக்கி ஏவப்பட்ட இரண்டு ட்ரோன்கள் செவ்வாய்கிழமை இரவு இடைமறித்ததாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை (IDF) ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஆளில்லா விமானங்கள் எய்லாட் அருகே மற்றும் அரவா பகுதியில் உள்ள டிம்னா சுரங்கங்களில் எச்சரிக்கை சைரன்களை ஒலிக்கப்பட்டுள்ளன.
IDF படி, இஸ்ரேலிய விமானப்படை கிழக்கில் இருந்து அரவா பகுதியில் இஸ்ரேலிய வான்வெளியில் ஊடுருவிய UAV (ஆளில்லா வான்வழி வாகனம்) ஒன்றை இடைமறித்ததுள்ளது.
கிழக்கிலிருந்து ஏவப்பட்ட இரண்டாவது UAV, இஸ்ரேலிய எல்லைக்குள் நுழைவதற்கு முன்பு இடைமறிக்கப்பட்டது.
ஈராக்கில் உள்ள இஸ்லாமிய எதிர்ப்பு அமைப்பு இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றது, அது ஈலாட்டில் உள்ள “முக்கியமான தளத்தை” குறிவைத்ததாகக் கூறியது.இதில் காயங்களோ, சேதமோ ஏற்படவில்லை