காஸா பகுதியை அதிர வைத்த இஸ்ரேலின் வான்வழித் தாக்குதல் – 15 பேர் உயிரிழப்பு

காஸா பகுதியில் இஸ்ரேலின் வான்வழித் தாக்குதலில் 15 பேர் உயிரிழந்துள்ளார்.
பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் இஸ்ரேல் நடத்திய வான் வழித் தாக்குதலில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.
தெற்கு நகரமான கான் யூனிஸ் என்ற இடத்தில் கூடாரத்தில் தங்கியிருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்தத் தாக்குதலில் பெரும்பாலும் குழந்தைகள் மற்றும் பெண்கள் உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்நிலையில் காஸாவிற்கு உதவிப் பொருட்கள் வராமல் இஸ்ரேல் தடுத்து வருவதால் உணவு மற்றும் மருத்துவப் பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக ஐநா உதவிக் குழுக்கள் தெரிவித்துள்ளன.
(Visited 1 times, 1 visits today)