காசா பகுதியில் உள்ள இரண்டு நகரங்கள் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் – பலர் உயிரிழப்பு
காசா பகுதியில் இஸ்ரேல் நடத்திய இரண்டு வான்வழித் தாக்குதல்களில் 38 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், ஏராளமானோர் காயமடைந்துள்ளதாகவும் ஹமாஸ் அமைப்பு அறிவித்துள்ளது.
இஸ்ரேலிய போர் விமானங்கள் ஹமாஸ் போராளிகளுக்கு சொந்தமான இராணுவ கட்டிடங்களை குறிவைத்ததாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.
காசாவில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க அகதிகள் முகாம்களில் ஒன்றான அல்-ஷாதியின் குடியிருப்பு பகுதி மீது இஸ்ரேலியப் படைகள் பலமுறை தாக்குதல் நடத்தியதாக காசாவில் உள்ள சிவில் பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
மற்றைய தாக்குதல் அல்-துஃபா மாவட்டத்தில் உள்ள வீடுகளை குறிவைத்து நடத்தப்பட்டதாக ஹமாஸின் கட்டுப்பாட்டில் உள்ள அரசாங்க ஊடக அலுவலகம் தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், இதுவரை வெளியிடப்பட்ட காட்சிகளில் மக்கள் காயமடைந்தவர்களை சுமந்து செல்வதையும், இடிபாடுகள் நிறைந்த தெருக்களில் உயிர் பிழைத்தவர்களைத் தேடுவதையும் காட்டுகிறது.
இந்த தாக்குதலில் 42 பேர் கொல்லப்பட்டதாக நம்பப்படுவதாக ஹமாஸ் ஊடகம் தெரிவித்துள்ளது.