சர்வதேச சட்டத்தை மீறிய இஸ்ரேல் : பதில் தாக்குதலுக்கு தயாராகும் ஈரான்!
இஸ்ரேல், ஈரான் மீது தாக்கதல்களை தொடங்கியுள்ள நிலையில் ‘ஆக்கிரமிப்புக்கு’ எதிராக தன்னை தற்காத்துக் கொள்ள ‘உரிமையும் கடமையும்’ இருப்பதாக ஈரான் கூறுகிறது.
இது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “வெளிநாட்டு ஆக்கிரமிப்புச் செயல்களுக்கு எதிராக தன்னைத் தற்காத்துக் கொள்ள உரிமையும் கடமையும் கொண்டதாகக் கருதுகிறது.
“ஈரான் இஸ்லாமிய குடியரசு ஈரானிய நாட்டின் அனைத்து பொருள் மற்றும் ஆன்மீகத் திறன்களைப் பயன்படுத்தி அதன் பாதுகாப்பு மற்றும் முக்கிய நலன்களைப் பாதுகாக்க வலியுறுத்துகிறது.
அத்துடன் பிராந்திய அமைதி மற்றும் பாதுகாப்பு, அனைத்து நாடுகளின் தனிப்பட்ட மற்றும் கூட்டுப் பொறுப்பு ஆகியவற்றிற்கான அதன் கடமைகளை நிலைநிறுத்துகிறது என்றும் பிராந்தியம் அமைதியைக் காக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது.
காசா மற்றும் லெபனானில் இஸ்ரேலின் நடவடிக்கைகள் மத்திய கிழக்கில் “பதற்றம் மற்றும் பாதுகாப்பின்மைக்கு முக்கிய காரணம்” என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.