ஈரானைத் தாக்க ஈராக் வான்வழியை பயன்படுத்திய இஸ்ரேல்? ஐ.நா.வில் முறைப்பாடு!
ஈரான் மீது தாக்குதல் நடத்த ஈராக் வான்வெளியை இஸ்ரேல் பயன்படுத்தியதாக ஐக்கிய நாடுகள் சபையிடம் ஈராக் புகார் அளித்துள்ளது.
ஐநா பொதுச்செயலாளர் மற்றும் பாதுகாப்பு கவுன்சில் குழுவிடம் ஈராக் அரசின் செய்தித் தொடர்பாளர் பாசிம் அல்-அவாடி புகார் அளித்துள்ளார்.
வான்வெளியைப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், இறையான்மைக்கு எதிரான இஸ்ரேலின் அத்துமீறல் செயல் ஈராக் கண்டனம் தெரிவிப்பதாகவும் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
(Visited 77 times, 1 visits today)





