நெதன்யாகுவுக்கு எதிரான கைதாணையை நிராகரித்த இஸ்ரேல், அமெரிக்கா
இஸ்ரேலும் அமெரிக்காவும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிறப்பித்த கைது ஆணையை நிராகரித்துள்ளன.
இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கும், அந்நாட்டு முன்னாள் தற்காப்பு அமைச்சர் யொவேவ் கலாண்ட்டுக்கும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கைது ஆணை பிறப்பித்தது.
அது யூதர்களுக்கு எதிரான நடவடிக்கை என நெதன்யாகு குற்றம் சுமத்தியுள்ளார்.
அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்தில் 124 உறுப்பு நாடுகள் உள்ளன. அவற்றில் அமெரிக்காவும் இஸ்ரேலும் இடம்பெறவில்லை.
ஹமாஸ் தளபதி முகமது டியப் இப்ராஹிம் அல்-மாசிரிக்கும் சர்வதேச நீதிமன்றம் கைது ஆணை பிறப்பித்தது.
அவர் காஸாவில் ஜூலை மாதம் வான் தாக்குதலில் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் குறிப்பிட்டுள்ளது.
(Visited 3 times, 3 visits today)