காசாவில் மருத்துவமனையை குறிவைத்து தாக்கிய இஸ்ரேல் – 28 பேர் பலி!

காசாவில் உள்ள மருத்துவமனையொன்றை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் குழந்தைகள் உள்பட 28 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் தாக்குதல் நடத்தப்பட்ட பகுதியில் சிவில் பாதுகாப்பு குழுக்கள் மீட்பு பணிகளை முன்னெடுத்து வருகின்றனர். பல உடல்கள் இன்னும் மீட்கப்படவில்லை என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
மருத்துவமனை பகுதியைச் சுற்றி உடல்கள் சிதறி கிடப்பதால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அதிகாரிகள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
மருத்துவமனைக்கு அடியில் மறைந்திருந்த “ஹமாஸ் கட்டளை மையத்தை” குறிவைத்ததாக இஸ்ரேல் கூறியது, ஆனால் எந்த ஆதாரத்தையும் வழங்கவில்லை.
(Visited 2 times, 2 visits today)