திடீரென தற்காப்பை வலுப்படுத்தும் இஸ்ரேல்!
சிரியாவின் டமாஸ்கஸ் நகரில் உள்ள ஈரானியத் துணைத் தூதரகத்தின் மீது கடந்த திங்கட்கிழமை இஸ்ரேல் வான் தாக்குதல் நடத்திய நிலையில், இஸ்ரேல் அதன் தற்காப்பை வலுப்படுத்துகிறது.
ஈரானியத் தளபதிகள் இருவர் உட்பட 13 பேர் கொல்லப்பட்டனர். அதற்குக் கடுமையான பதிலடி கொடுக்க ஈரான் சூளுரைத்திருந்தது.
இஸ்ரேல் அதன் ஆகாயத் தற்காப்பை வலுப்படுத்திய மறுநாள் போர்க்காலப் படை வீரர்களைத் தயார்நிலையில் வைத்தது.
டெல் அவீவ், ஜெருசலம் ஆகிய நகரங்களில் வசிக்கும் மக்கள் GPS எனும் புவியிடங்காட்டி முறையில் இடையூறு ஏற்பட்டிருப்பதாகக் கூறினர்.
ஏவுகணைகளை முறியடிக்க அந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது. போர்க்காலப் படையினரின் விடுப்பை இஸ்ரேலிய ராணுவம் ரத்துச் செய்திருக்கிறது.
எவரும் அச்சுறுத்தினால் அல்லது எந்த நாடும் அச்சுறுத்த முயன்றால் இஸ்ரேல் தன்னைத் தற்காத்துக் கொள்ளும் என்று அந்நாட்டுப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாஹு கூறினார்.