ஹமாஸின் முக்கிய தலைவர் மீது தாக்குதல் நடத்திய இஸ்ரேல்
இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்திய ஹமாஸ் பயங்கரவாதிகளை ஒழிக்கும் நோக்கில் காசா வடக்கு பகுதியில் இஸ்ரேல் இராணுவம் வான்வழி தாக்குதலை அதிகரித்துள்ளது.
அதன் தொடர்ச்சியாக தரைவழி தாக்குதலையும் மெல்ல மெல்ல விரிவு படுத்தி வரும் நிலையில் இன்னும் ஓரிரு நாட்களில் தரைவழி தாக்குதலை இஸ்ரேல் ராணுவம் தூங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் ஹமாஸ் அமைப்பின் முக்கிய தலைவர் மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது. வடக்கு காசா பகுதியில் பயங்கரமான தாக்குதலை நடத்தி வரும் இஸ்ரேல் ராணுவம் ஹமாஸ் அமைப்பினரை வேட்டையாடி வருகிறது.
அதன் தொடர்ச்சியாக நேற்று இரவில் இஸ்ரேல் போர் விமானங்கள் ஹமாஸின் ஏரியல் அரேயின் தலைவரான அசெம் அபு ரகாபாவை தாக்கியுள்ளது. இந்த தாக்குதலில் அவர் கொல்லப்பட்டாரா என்ற தகவல் இன்னும் வெளியாகவில்லை.
தாக்குதலை மட்டும் உறுதி செய்துள்ள இஸ்ரேல் ராணுவம் அவர் ஹமாஸின் UAVகள், ட்ரோன்கள், பாராகிளைடர்கள், வான்வழி கண்டறிதல் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றிற்கு அபு ரகாபா பொறுப்பேற்றிருந்தார் என தெரிவித்துள்ளது.
அவர் அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலியர்கள் படுகொலைகளைத் திட்டமிடுவதில் முக்கிய பங்காற்று நாள் என தெரிய வந்துள்ளது. ஹமாஸ் பயங்கரவாதிகள் பாராகிளைடர்கள் மூலம் இஸ்ரேலுக்குள் ஊடுருவ கட்டளையிட்டவர் என்றும், இஸ்ரேல் ராணுவ நிலைகள் மீதான ட்ரோன் தாக்குதல்களுக்குப் பொறுப்பானவர் என்றும் இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.