காசா முழுவதும் 50 ‘பயங்கரவாத இலக்குகளை’ தாக்கி அழித்த இஸ்ரேல்!
காசா முழுவதும் 50 ‘பயங்கரவாத இலக்குகளை’ தாக்கியதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
இராணுவம் வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலும் ஹமாஸும் போர் நிறுத்தத்திற்கு தயாராகி வரும் நிலையில் இந்த அறிக்கை வந்துள்ளது.
இதற்கிடையில் இஸ்ரேல்-காசா எல்லைக்கு மேலே புகை மூட்டம் எழுவதைக் காட்டும் படங்களை சர்வதேச ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது.
இன்று காலை ஜெருசலேம் மற்றும் டெல் அவிவ் நகரங்களிலும் சைரன்கள் ஒலித்ததாக தெரியவருகிறது.





