காஸா பகுதிக்கு எதிரான நடவடிக்கைகளை தீவிரப்படுத்திய இஸ்ரேல்!
ஹமாஸின் கட்டுப்பாட்டில் உள்ள காஸா பகுதிக்கு எதிரான நடவடிக்கைகளை இஸ்ரேல் தீவிரப்படுத்தியுள்ளது.
இதன்படி காசா பகுதிக்கான எரிபொருள், உணவு விநியோகத்தை முடக்கியுள்ளதாக அந்நாட்டு சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள, இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலண்ட், இது “மிருகத்தனமான மக்களுக்கு” எதிரான போரின் ஒரு பகுதியாகும் என்று கூறினார்.
2007 ஆம் ஆண்டு பாலஸ்தீனப் படைகளிடம் இருந்து ஹமாஸ் அதிகாரத்தைக் கைப்பற்றியதில் இருந்து இஸ்ரேலும் எகிப்தும் காஸா மீது பல்வேறு அளவிலான முற்றுகைகளை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
(Visited 11 times, 1 visits today)





