மூன்று பலஸ்தீனிய பெண்களை கொன்ற ஆண்களை சுட்டுக்கொன்ற இஸ்ரேல்!
இஸ்ரேலிய – பலஸ்தீனியப் பெண்கள் மூவரை கொலை செய்த பலஸ்தீனிய ஆண்கள் மூவரை பாதுகாப்புப் படையினர் சுட்டுக்கொன்றுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
குறித்த ஆண்கள் மூவரும் ஹமாஸ் இயக்கத்தின் அங்கத்தவர்கள் எனவும் மேற்குக் கரையில் நடைபெற்ற முற்றுகையின்போது அவர்கள் கொல்லப்பட்டதாகவும், இஸ்ரேல் அறிவித்துள்ளது.
இராணுவம் பொலிஸ் மறறும் ஷின்பெத் பாதுகாப்புச் சேவை ஆகியவற்றினால் மேற்கொள்ளப்பட்ட கூட்டு நடவடிக்கை ஒன்றின்போது இவர்கள் கொல்ப்பட்னர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 7 ஆம் திகதி ஹம்ரா நகரில் வாகனமொன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதலினால் பிரித்தானிய இஸ்ரேலியர்களான 3 பெண்கள் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.





