ஈரானின் உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரி உயிரிழப்பு – இஸ்ரேல் அறிவிப்பு
ஈரானின் உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரியான அலி லாரிஜானி (Ali Larijani) கொலை செய்யப்பட்டுள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் (Israel Katz) தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் நேற்றிரவு நடத்திய தாக்குதலில் அவர் உயிரிழந்ததாக தகவல் கிடைத்துள்ளதெனவும் அவர் கூறியுள்ளார்.
இருப்பினும், அலி லாரிஜானியிடமிருந்து செய்தி ஒன்று வெளியாகவுள்ளதாக ஈரானின் ‘தஸ்னிம்’ (Tasnim) மற்றும் ‘மெஹர்’ (Mehr) செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
எவ்வாறாயினும், ஈரானிய அதிகாரிகளிடமிருந்து எவ்வித உத்தியோகப்பூர்வ அறிவிப்புகளும் வெளியாகவில்லையென சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.





