அனுமதிக்க மறுக்கும் இஸ்ரேல் – காஸாவுக்கு வெளியே நீண்ட வரிசையில் நிற்கும் லொரிகள்

காஸாவுக்கு அனுப்பப்படும் நிவாரணப் பொருள்களை இஸ்ரேல் அனுமதிக்க மறுப்பதாக எகிப்து எல்லைப் பகுதியில் உதவிப் பொருள்களுடன் லொரிகள் வரிசையில் காத்திருக்கின்றது.
காஸா பகுதிக்கு உணவு, மருந்து ஆகியவற்றைக் கொண்டு போய்ச் சேர்ப்பதில் தாமதம் ஏற்பட்டிருப்பதாக ஐக்கிய நாட்டு நிறுவன அதிகாரிகளும் ஓட்டுனர்களும் கூறிவருகின்றனர்.
நிவாரணப் பொருள்களை விநியோகம் செய்வதில் பெரும் தடங்கல் உள்ளது. இஸ்ரேல் அவற்றைக் கடுமையாகக் கண்காணிக்கிறது.
உலக நாடுகள் இஸ்ரேலைக் கண்டிக்கின்றன. காஸாவில் பசியும் பஞ்சமும் நிலவுவதாகக் கூறப்படுகிறது.
(Visited 1 times, 1 visits today)