காஸாவை முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர தயாராகும் இஸ்ரேல்

காஸா பகுதியை முழுமையாக அதன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர இஸ்ரேல் தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
காஸாவுக்குள் நிவாரணப் பொருள்களை விநியோகம் செய்ய 2 மாதங்களுக்குப் பிறகு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் புதிதாகத் தொடங்கியுள்ள கடும் ராணுவ நடவடிக்கைகளால் மேலும் அதிகமானோர் உயிரிழந்தனர்.
மார்ச் 2ஆம் திகதியிலிருந்து இஸ்ரேல் காஸா வட்டாரத்தை முழுமையாக முற்றுகையிட்டுள்ளது. அந்த வட்டாரத்தில் 2 மில்லியன் பேர் பட்டினியில் வாடுவதாக உலகச் சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
அங்கு மனிதாபிமான நெருக்கடி தொடர்கிறது. அது குறித்து இஸ்ரேல் கடுமையாகக் குறை கூறப்படுகிறது. காஸா பகுதிக்குள் நிவாரணப் பொருள்கள் கொண்ட ஐந்து லாரிகளுக்கு அனுமதி வழங்கவிருப்பதாக இஸ்ரேல் தெரிவித்தது.
அதில் குழந்தைகளுக்கான உணவும் உள்ளது. மொத்தம் 9 லொரிகளுக்கு அனுமதி கொடுக்கப்பட்டதாக ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் மனிதாபிமானப் பேரிடர் நிர்வாகத் தலைவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.
ஆனால் அவசரமாகத் தேவைப்படும் நிவாரணப் பொருள்களில் அது மிகக் குறைவான அளவு என்று அவர் கூறினார்.