40,000 போர்க்காலப் படைவீரர்களுடன் காஸாவின் மிகப்பெரிய நகரை கைப்பற்ற தயாராகும் இஸ்ரேல்

காஸா சிட்டியில் பல்லாயிரம் போர்க் காலப் படைவீரர்களைக் களமிறக்குவதற்கு இஸ்ரேல் நடவடிக்கை எடுத்துள்ளது.
காஸாவின் மிகப்பெரிய நகரான காஸா சிட்டியை முழுமையாகக் கைப்பற்றும் முயற்சியை இஸ்ரேல் விரிவுபடுத்தியுள்ளது.
அரசாங்கத்தின் அழைப்பை ஏற்று சுமார் 40,000 போர்க்காலப் படைவீரர்கள் திரண்டிருப்பதாக இஸ்ரேலிய ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.
காஸா சிட்டி புறநகர்ப் பகுதிகளில் இஸ்ரேலிய ராணுவம் கடந்த சில நாளாகத் தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளது.
முன்னெப்போதும் செல்லாத இடங்களிலும் துருப்பினர் புகுந்திருப்பதாகச் சொல்கிறார் இஸ்ரேலிய ராணுவத் தளபதி.
அமைச்சரவையிலும், நாட்டிலும் எதிர்ப்பு நீடித்தாலும் தாக்குதலைத் தீவிரப்படுத்த இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் உறுதியளித்துள்ளார்.
(Visited 1 times, 1 visits today)