மத்திய கிழக்கு

இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே போர் நிறுத்தம் அறிவிப்பு!

இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே மோதல் போக்கு நீடித்த நிலையில், போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே சமீபகாலமாக மோதல் போக்கு அதிகரித்து வருகிறது.  இதற்கிடையே பாலஸ்தீனிய ஆயுத குழுவின் தலைவர் காதர் அதானென் கடந்த 2ஆம் திகதி இஸ்ரேல் சிறையில் உயிரிழந்தார்.

இதையடுத்து காசா முனையில் இருந்து இஸ்ரேல் மீது ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால் ஆயுதக் குழுவை குறிவைத்து இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில் 30 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து கடுமையான மோதல் போக்கு நீடித்த நிலையில், தற்போது போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து காசாமுனை பகுதியில் உள்ள போராளி குழுவின் தலைவர் ஒருவர் கூறும்போது  5 நாட்கள் கடுமையாக நடந்த சண்டையை முடிவுக்கு கொண்டு வர இஸ்ரேலுடன் போர் நிறுத்த ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது.

எகிப்தின் தொடர்ச்சியான முயற்சியால் இந்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இந்த முயற்சியை நாங்கள் பாராட்டுகிறோம் என்றார்.

VD

About Author

You may also like

மத்திய கிழக்கு

ஆர்மீனியாவிற்கும், அஸர்பைஜானுக்கும் இடையில் பதற்றம்!

  • April 24, 2023
ஆர்மீனியாவுக்குச் செல்லும் முக்கிய வீதியொன்றில் அஸர்பைஜான் படையினர் சோதனை நிலையமொன்றை அமைத்ததால் இரு நாடுகளுக்கும் இடையில பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. இவ்விரு நாடுகளும் 1990 களிலும் 2020 ஆம்
ஆப்பிரிக்கா மத்திய கிழக்கு

சூடான் மோதல் குறித்து கோப்ரா கூட்டம் இன்று!

  • April 24, 2023
சூடானில் ஏற்பட்டுள்ள மோதல் தொடர்பாக மற்றொரு கோப்ரா கூட்டம் இன்று நடைபெறும் என டவுனிங் ஸ்ட்ரீட் தெரிவித்துள்ளது. இன்றைய அமர்விற்கு யார் தலைமை தாங்குவார்கள் என்பது தெரியவில்லை.
error: Content is protected !!