மக்களை வெளியேறும்படி உத்தரவிட்ட இஸ்ரேல்
குடியிருப்பாளர்கள் வெளியேறும்படி இஸ்ரேலிய ராணுவம் உத்தரவிட்டுள்ளது.
காஸாவின் வடக்கில் முற்றுகையிடப்பட்ட பெட் ஹானொன் (Beit Hanoun) நகரத்தைச் சேர்ந்த எஞ்சியிருக்கும் குடியிருப்பாளர்களுக்கே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தாக்குதலின்போது பொதுமக்களுக்குக் காயம் ஏற்படாமல் இருப்பதற்கு அந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக இஸ்ரேல் தெரிவித்தது.
அந்தப் பகுதியைப் பயன்படுத்தி ஹமாஸ் கிளர்ச்சியாளர்கள் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்துவதாக அது குறிப்பிட்டது.
இஸ்ரேலின் அண்மைய உத்தரவால் பல குடியிருப்பாளர்கள் தங்களது வீடுகளைவிட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளது.
பாலஸ்தீன அதிகாரிகளும் ஐக்கிய நாட்டு நிறுவன அதிகாரிகளும் காஸாவில் பாதுகாப்பான இடங்கள் எஞ்சி இருக்கவில்லை என்று கூறினர்.
காஸாவில் தொடர்ந்து மக்கள் வெளியேற்றப்பட்டால் அங்கு மனிதாபிமான பேரிடர் இன்னும் மோசமாகலாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.