இஸ்ரேல் – ஈரான் போர் பதற்றம் : G7மாநாட்டில் இருந்து வெளியேறிய ட்ரம்ப் !

இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான போர் நிறுத்தம் குறித்து விவாதிக்கப்பட்டு வந்த ஜி7 உச்சிமாநாட்டிலிருந்து அமெரிக்க ஜனாதிபதி இடையில் வெளியேறியுள்ளார். இந்நிலையில் இதனை பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் தவறாக விளம்பரப்படுத்தியதாக கூறப்படுகிறது. .
இந்நிலையில் மக்ரோனின் நடவடிக்கைக்கு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இந்த உச்சிமாநாட்டில் “காசாவில் போர் நிறுத்தம் உட்பட மத்திய கிழக்கில் விரோதப் போக்குகளை” முடிவுக்குக் கொண்டுவர அழைப்பு விடுப்பதில் ஏழு நாடுகளின் தலைவர்கள் ஒப்புக்கொண்டனர்.
டிரம்ப் உட்பட ஒவ்வொரு தலைவரும் கூட்டு அறிக்கையில் கையெழுத்திட்டனர். பின்னர் அமெரிக்க ஜனாதிபதி “பெரிய விஷயங்களுக்காக” வாஷிங்டனுக்குத் திரும்புவதாகக் கூறி கூட்டத்தை முன்கூட்டியே விட்டுச் சென்றார்.
இந்நிலையில் இது குறித்து தனது ட்ரூத் சமூக ஊடக பக்கத்தில் எழுதியுள்ள ட்ரம்ப், “தவறு! நான் இப்போது வாஷிங்டனுக்குச் செல்வதற்கான காரணம் அவருக்குத் தெரியாது, ஆனால் அதற்கும் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அதை விட மிகப் பெரியது. வேண்டுமென்றே இருந்தாலும் இல்லாவிட்டாலும், இம்மானுவேல் எப்போதும் தவறாகப் புரிந்துகொள்கிறார்” என பதிவிட்டுள்ளார்.