மேற்கத்தேய நாடுகளில் உள்ள யூத மக்களுக்கு அழைப்பு விடுத்த இஸ்ரேல்!
இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளில் உள்ள யூத சமூகங்களை இஸ்ரேலுக்கு குடிப்பெயருமாறு இஸ்ரேலின் வெளியுறவு அமைச்சர் கிடியோன் சார் (Gideon Saar) அழைப்பு விடுத்துள்ளார்.
உலகளாவிய ரீதியில் யூத எதிர்ப்பு சம்பவங்கள் அதிகரித்து வருவதை சுட்டிக்காட்டிய அவர் மேற்படி அழைப்பு விடுத்துள்ளார்.
யூதர்கள் “உலகம் முழுவதும் வேட்டையாடப்படுகிறார்கள்” என்றும், குடும்பங்கள் ஏன் இதுபோன்ற சூழ்நிலையில் குழந்தைகளை வளர்க்க வேண்டும் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
யூத எதிர்ப்பு தாக்குதல்களின் அதிகரிப்பை காசாவில் உள்ள மோதலுடன் தொடர்புப்படுத்தி பேசிய அவர், மக்களை பாதுகாக்க அதிக நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும் ( Benjamin Netanyahu) மேற்கத்திய அரசாங்கங்களிடம், யூத குடிமக்களைப் பாதுகாக்க இன்னும் அதிகமாகச் செய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும் ஆஸ்திரேலியா பாலஸ்தீன அரசை அங்கீகரிப்பதை விமர்சித்தார். இது யூத எதிர்ப்புக்கு தூண்டுவதாக அவர் கூறியுள்ளார்.





