காசாவை முழுமையாக கைப்பற்றுவதற்கான முதல் கட்டம் நடவடிக்கையில் இஸ்ரேல்

காசாவை முழுமையாகக் கைப்பற்றுவதற்கான தரைவழித் தாக்குதலின் முதல் கட்டத்தைத் தொடங்கியுள்ளதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய, காசா நகரத்திற்கு அருகிலுள்ள பகுதிகள் ஏற்கனவே கைப்பற்றப்பட்டுவிட்டதாக இஸ்ரேலிய இராணுவம் அறிவித்துள்ளது.
சீ டவுன் மற்றும் ஜபாலியா பகுதிகளில் ஏற்கனவே இராணுவ நடவடிக்கைகள் நடந்து வருவதாக வெளிநாட்டு ஊடக அறிக்கைகள் குறிப்பிடுகின்றன.
காசா நகரத்தை முழுமையாகக் கைப்பற்ற 60,000 வீரர்களை அனுப்புவதாக இஸ்ரேல் நேற்று அறிவித்தது.
சுமார் ஐந்து மாதங்களுக்குள் காசா நகரத்தை முழுமையாகக் கைப்பற்ற திட்டமிட்டிருந்தாலும், அதை இன்னும் குறைந்த நேரத்தில் முடிக்க இலக்கு வைத்திருப்பதாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியுள்ளார்.
ஹமாஸுடனான அமைதிப் பேச்சுவார்த்தைகள் கடந்த மாதம் முறிந்ததை அடுத்து, காசா நகரத்தை முழுமையாகக் கைப்பற்ற இஸ்ரேல் முடிவு செய்தது.