இஸ்ரேல்-ஹெஸ்பொல்லா போர் நிறுத்தம்: தாயகம் திரும்பும் லெபனான் பொதுமக்கள்
இஸ்ரேலுக்கும் ஹெஸ்புல்லாஹ் அமைப்புக்கும் இடையிலான போர்நிறுத்தம் நடைமுறைக்கு வந்துள்ள நிலையில் தங்களது இருப்பிடங்களில் இருந்து வெளியேறியவர்கள் மீண்டும் தங்களது இருப்பிடங்களுக்குத் திரும்பி வருகின்றனர்.
அந்த நாட்டு நேரப்படி புதன்கிழமை அதிகாலை 4 மணிமுதல் போர் நிறுத்தம் நடைமுறைக்கு வந்துள்ளது.
இந்த ஒப்பந்தம் பல ஆண்டுகளாக இஸ்ரேலுக்கும் ஈரான் ஆதரவு போராளிக் குழுவிற்கும் இடையே நடந்த மிக மோசமான மோதலை முடிவுக்குக் கொண்டுவந்தது,
ஆனால் இஸ்ரேல் காசா பகுதியில் அதன் மற்றொரு பரம எதிரியான பாலஸ்தீனிய போராளிக் குழுவான ஹமாஸுடன் இன்னும் போராடி வருகிறது.
எவ்வாறாயினும் தெற்கு லெபனானில் உள்ள தங்களது நிலைக்குச் செல்ல வேண்டாம் இஸ்ரேல் இராணுவத்தினர் எச்சரித்துள்ளனர்.
தங்களினதும் தங்களது குடும்ப உறுப்பினர்களினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக அங்கு செல்ல வேண்டாம் என இஸ்ரேல் இராணுவம் எச்சரித்துள்ளது.
இதேவேளை, இஸ்ரேலுக்கும் ஹெஸ்புல்லாவுக்கும் இடையிலான போர் நிறுத்தத்தை வரவேற்பதாக ஈரான் அறிவித்துள்ளது.