இஸ்ரேல் – ஹமாஸ் போர் பல மாதங்களுக்கு நீடிக்கும் – இஸ்ரேல் பிரதமர் பரபரப்பு தகவல்
இஸ்ரேல், ஹமாஸ் போர் இன்னும் பல மாதங்களுக்கு நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல் பிரதமர் நேதன்யாஹூ இதனை தெரிவித்துள்ளார்.
காஸாவுக்குள் ஆயுதங்கள் எடுத்து செல்லப்படுவதை தடுத்து நிறுத்த காஸா, எகிப்து எல்லை பகுதியை இஸ்ரேல் தனது கட்டுப்பாட்டுக்கு கீழ் கொண்டுவர வேண்டும் என கூறியுள்ளார்.
ஈரான் ஆதரவு ஹெஸ்பொல்லா போராளிகள் லெபனானில் இருந்தபடி தாக்குதல் நடத்திவந்தால் அவர்களும், ஈரானும் கனவிலும் நினைத்து பார்க்காத தாக்குதலை எதிர்கொள்ள நேரிடும் எனவும் நேதன்யாஹூ எச்சரித்துள்ளார்.
பாதுகாப்புத்துறை அமைச்சகத்தில் இந்த செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றபோது வெளியே நூற்றுக்கணக்கானோர் திரண்டு போரை நிறுத்தி எஞ்சியுள்ள 130 பிணை கைதிகளையும் மீட்குமாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
(Visited 12 times, 1 visits today)





