இஸ்ரேல் -ஹமாஸ் போர் நிறுத்தத்தை நீடிக்க நடவடிக்கை!

இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையில் தற்போது நடைமுறையில் உள்ள தற்காலிக போர்நிறுத்தத்தை வெள்ளிக்கிழமை வரை நீடிக்க இரு தரப்பும் இணக்கம் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
கத்தார், எகிப்து மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் போர் நிறுத்தத்தை நீட்டிப்பதில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
இதேவேளை, நேற்று (29.11) காசாவில் 10 இஸ்ரேலியர்களையும் 04 தாய்லாந்து நாட்டவர்களையும் ஹமாஸ் விடுதலை செய்திருந்தது.
இதனிடையே, இஸ்ரேல் – ரஷ்ய குடியுரிமை பெற்ற இரண்டு பெண்கள் நேற்று விடுவிக்கப்பட்டனர்.
அதேநேரம் இஸ்ரேலில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 30 பாலஸ்தீனியர்கள் நேற்று விடுவிக்கப்பட்டனர்.
(Visited 5 times, 1 visits today)