ஐரோப்பா

காசா மருத்துவர்கள் கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு எழுந்த நிலையில்,இரு பிரிட்டி‌ஷ் நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தடுத்துவைத்த இஸ்ரேல்

இஸ்ரேல் பிரிட்டி‌ஷ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவரைத் தடுத்து வைத்துள்ளதாக பிரிட்டி‌ஷ் வெளியுறவு அமைச்சர் டேவிட் லாமி கூறியுள்ளார். நாடாளுமன்றப் பேராளர் குழுவுடன் வந்த அந்த உறுப்பினர்களை நாட்டுக்குள் நுழைய இஸ்ரேல் அனுமதிக்கவில்லை.

தடுத்து வைக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த யுவன் யுவாங், அப்டிஸாம் என்று இஸ்ரேலியக் குடிநுழைவு அமைச்சு தெரிவித்ததாக ஸ்கை நியூஸ் செய்தி நிறுவனம் குறிப்பிட்டது.

அவர்கள் பாதுகாப்புப் படைகளின் நடவடிக்கைகளை ஆவணப்படுத்தி இஸ்ரேலுக்கு எதிரான வெறுப்புணர்ச்சியைப் பரப்ப திட்டமிட்டதாகச் சந்தேகிக்கப்படுகிறது. அதை முன்னிட்டு இஸ்ரேலுக்கு நுழைய அவர்களுக்கு அனுமதி மறுப்பட்டதாகக் கூறப்பட்டது.

யாங்கும் , முகமதும் லூட்டானிலிருந்து ஏப்ரல் 5ஆம் திகதி இஸ்ரேல் சென்றதாக ஸ்கை நியூஸ் சொன்னது.

பிரிட்டி‌ஷ் நாடாளுமன்ற உறுப்பினர்களை நடத்துவதற்கான முறை இது அல்ல என்று இஸ்ரேலிய அரசாங்கத்திடம் கூறியிருப்பதாகவும் தடுத்து வைக்கப்பட்ட உறுப்பினர்களுக்கு ஆதரவளிக்க அவர்களுடன் தொடர்பில் இருப்பதாகவும் பிரிட்டி‌ஷ் அமைச்சர் லாமி சொன்னார்.

காஸாவில் சண்டைநிறுத்த உடன்பாட்டையும் பேச்சுவார்த்தையையும் உறுதிசெய்வதோடு பிணையாளிகளை விடுவிப்பதிலும் போரை நிறுத்துவதிலும் பிரிட்டி‌ஷ் அரசாங்கம் கவனம் செலுத்துவதாக அவர் குறிப்பிட்டார்.

(Visited 35 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்