இஸ்ரேலில் அடுத்த 48 மணித்தியாலத்திற்கு அவசர நிலைமை பிரகடனம்

இஸ்ரேலில் அடுத்த 48 மணித்தியாலத்திற்கு அவசர நிலைமை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
ஹெஸ்புல்லா அமைப்பு தாக்குதலை மேற்கொள்வதற்கு திட்டமிட்டிருந்தமை தெரியவந்துள்ளது.
இதனை தொடர்ந்து லெபனானில் உள்ள ஹெஸ்புல்லா அமைப்பின் இலக்குகள் மீது முன்கூட்டிய தாக்குதலை மேற்கொண்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் மீது தாக்குதலை மேற்கொள்வதற்கு ஹெஸ்புல்லா அமைப்பு தயாராக உள்ளதை நாங்கள் அவதானித்தோம் அதனால் எங்கள் பொதுமக்களிற்கு ஆபத்து ஏற்படும் நிலை காணப்பட்டது என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
தென் லெபனானில் உள்ள ஹெஸ்புல்லா இலக்குகள் மீது தனது விமானங்கள் தாக்குதல்களை மேற்கொள்கின்றன என குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை இஸ்ரேலில் அடுத்த 48 மணித்தியாலத்திற்கு அவசர நிலைமை பிரகடனம் செய்யப்பட்டுள்ளதாக அந்த நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் யோவ் கலன்ட் அறிவித்துள்ளார்.
(Visited 11 times, 1 visits today)