மத்திய கிழக்கு

இஸ்லாமியர்களின் புனித பெருநாள் அன்று கொடூரமாக தாக்கிய இஸ்ரேல் – 95 பேர் பலி!

கடந்த 24 மணி நேரத்தில் காசாவில் குறைந்தது 95 பேரை இஸ்ரேலியப் படைகள் கொன்று குவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

காசா நகரில் குண்டுவீச்சுக்கு உள்ளான குடியிருப்பு கட்டிடத்தின் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியவர்களை மீட்க மீட்புப் பணியாளர்கள் விரைந்து சென்றதாகவும், மேலும் பல பாலஸ்தீனியர்கள் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுவதாகவும் செய்தி குறிப்புகள் தெரிவித்துள்ளன.

சனிக்கிழமை கட்டிடத்தைத் தாக்குவதற்கு முன்பு இஸ்ரேலிய இராணுவம் “எந்த எச்சரிக்கையையும் விடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.  இந்த தாக்குதலில் பல பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட அக்கம் பக்கத்தில் குறைந்தது 16 பேர் கொல்லப்பட்டதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

“எங்கள் குழந்தைகளை உற்சாகப்படுத்தவும், ஈத் கொண்டாட அவர்களுக்கு ஆடை அணிவிக்கவும் எழுந்திருப்பதற்குப் பதிலாக,” “நாங்கள் இடிபாடுகளுக்கு அடியில் இருந்து பெண்கள் மற்றும் குழந்தைகளின் உடல்களை எடுத்துச் செல்ல எழுந்திருக்கிறோம்” என்று பாலஸ்தீனியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

 

VD

About Author

You may also like

மத்திய கிழக்கு

ஆர்மீனியாவிற்கும், அஸர்பைஜானுக்கும் இடையில் பதற்றம்!

  • April 24, 2023
ஆர்மீனியாவுக்குச் செல்லும் முக்கிய வீதியொன்றில் அஸர்பைஜான் படையினர் சோதனை நிலையமொன்றை அமைத்ததால் இரு நாடுகளுக்கும் இடையில பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. இவ்விரு நாடுகளும் 1990 களிலும் 2020 ஆம்
ஆப்பிரிக்கா மத்திய கிழக்கு

சூடான் மோதல் குறித்து கோப்ரா கூட்டம் இன்று!

  • April 24, 2023
சூடானில் ஏற்பட்டுள்ள மோதல் தொடர்பாக மற்றொரு கோப்ரா கூட்டம் இன்று நடைபெறும் என டவுனிங் ஸ்ட்ரீட் தெரிவித்துள்ளது. இன்றைய அமர்விற்கு யார் தலைமை தாங்குவார்கள் என்பது தெரியவில்லை.
error: Content is protected !!