காசாவில் கத்தோலிக்க தேவாலயம் மீது இஸ்ரேல் தாக்குதல் – மூன்று பேர் மரணம்

காசாவில் கத்தோலிக்க தேவாலயத்தின் மீது இஸ்ரேலியப் படைகள் குண்டுவீசித் தாக்குதல் நடத்தியதில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 10 பேர் காயமடைந்தனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
காசா நகரில் உள்ள புனித குடும்ப தேவாலயத்தில் நடத்தப்பட்ட தாக்குதலின் விளைவாக ஒருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது என்று தேவாலயம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
தேவாலயத்தின் பாதிரியாரும் லேசான காயமடைந்துள்ளார்.
கொல்லப்பட்டவர்களில், திருச்சபையின் 60 வயதான துப்புரவுப் பணியாளரும், தேவாலய வளாகத்தில் உள்ள ஒரு கரிட்டாஸ் கூடாரத்திற்குள் உளவியல் ரீதியான ஆதரவைப் பெற்று வந்த 84 வயதுடைய ஒரு பெண்ணும் அடங்குவர்.
(Visited 1 times, 1 visits today)