ஹிஸ்புல்லாஹ் நடத்தும் வங்கிகள் மீது தாக்குதல் நடத்திய இஸ்ரேல் – ஆயிரக்கணக்கானோர் பலி!
லெபனானின் பெய்ரூட் நகரில் ஹிஸ்புல்லாஹ் நடத்தும் வங்கிகள் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஈரான் ஆதரிக்கும் ஹிஸ்புல்லா அமைப்பு அழிக்கப்படும் என்று இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் கூறியதை அடுத்து இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
கடந்த மாதம் லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா நிலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதில் இருந்து இதுவரை 1,800 பேர் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.





