முக அடையாளத்திற்காக விசேட பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட இஷாரா செவ்வந்தி

‘கணேமுல்ல சஞ்சீவ’ என்ற பாதாள உலக குழு உறுப்பினரின் கொலை வழக்கில் முக்கிய சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி மற்றும் அவரது குழுவினர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
இஷாரா உட்பட 6 பேர் கொண்ட குழு கடந்த 13ம் திகதி நேபாளத்தில் விசேட சுற்றிவளைப்பின் கீழ் கைது செய்யப்பட்டனர்.
இதன்படி அவரும் அவரது குழுவினரும் இன்று (15) மாலை 6.52 மணிக்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் (SriLankan Airlines) விமானம் மூலம் காத்மாண்டுவிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்தனர்.
கடந்த பெப்ரவரி மாதம் 19ம் திகதி புதுக்கடை நீதவான் நீதிமன்றத்திற்குள் கணேமுல்ல சஞ்சீவ படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் இஷாரா செவ்வந்தி பிரதான சந்தேகநபராக அடையாளப்படுத்தப்பட்டார்.
இந்நிலையில், நாட்டிற்கு அழைத்து வரப்பட்ட இஷாரா செவ்வந்தியின் முகத்தை அடையாளம் காண விசேட பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
அதில் அவரது முகம் 100% உறுதி செய்யப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.
(காணொளி பதிவு மூலம் செய்தியை பார்வையிட)
https://web.facebook.com/reel/705029195945989