டுவிட்டர் செயலிழந்ததா? 2 முறை முறைப்பாடு
சமூகவலைத்தள செயலிழப்புகளைப் பற்றி ஆய்வு செய்யும் டவுன்டிடெக்டர் என்ற வலைத்தளத்தின் அறிக்கைபடி, திங்களன்று, நியூ யார்க் நகரம், சிகாகோ மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் போன்ற முக்கிய நகரங்களில் உள்ள பயனர்கள், தங்கள் டுவிட்டர் பக்கங்களை பயன்படுத்துவதில் சிக்கல்கள் ஏற்பட்டது குறித்து புகார் அளித்துள்ளனர்.
திங்களன்று, நியூயார்க் நகரம், சிகாகோ மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் போன்ற சில முக்கிய நகரங்களில் உள்ள பயனர்கள், டுவிட்டரில் சிக்கல்களை எதிர்கொண்டனர். மீடியாவைப் பதிவேற்றுவதும், “My Feed” பார்ப்பதிலும் பிரச்சனையாக இருப்பதாக அவர்கள் புகார் தெரிவித்தனர்.
எலோன் மஸ்க் தலைமையிலான இந்த தளம் வெளிப்படையான செயலிழப்பு குறித்து முறையான அறிக்கை எதுவும் தற்போது வரை வெளியிடவில்லை. ஏறக்குறைய 49 சதவிகிதம் புகாரளிக்கப்பட்ட சிக்கல்கள், பயன்பாட்டிலுள்ள சிக்கல்கள், அதே போல 41 சதவிகிதம் வலைத்தளம் சார்த்த புகார்கள் மற்றும் 10 சதவிகிதம் சர்வர் இணைப்பில் உள்ள சிக்கல்கள். மேலேகுறிப்பிடப்பட்டுள்ள அனைத்து தரவுகளும் டவுன்டெக்டரிடமிருந்து எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
பில்லியனரான எலோன் மஸ்க் கடந்த அக்டோபரில் டுவிட்டரை சுமார் 44 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு வாங்கினார். டெஸ்லா தலைவரான மஸ்க், டுவிட்டர் தளத்தின் பெயரை மாற்றியதோடு பல புதிய அம்சங்களையும் அறிமுகப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுமட்டும்மல்லாமல் அண்மையில் டுவிட்டர் பெயர் X என்று மாற்றி, அதன் லோகோவையும் அவர் மாற்றியது குறிப்பிடத்தக்கது.