இலங்கையில் எரிபொருளுக்கு தட்டுப்பாடா? பிரதி அமைச்சர் விளக்கம்

இலங்கையில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லை என பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் அனில் ஜயந்த தெரிவித்தார்.
எரிபொருள் கொள்வனவு கட்டளை செய்வதில்லை என எரிபொருள் விநியோகத்தர்கள் சங்கம் நேற்று ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் தெரிவித்தது.
இதன் காரணமாக நாடளாவிய ரீதியில் நேற்று இரவு முதல் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசைகள் காணப்பட்டன. இந்நிலையில் நாடாளுமன்றம் இன்று கூடிய போது எதிர்க்கட்சியினர் நாட்டில் மீண்டும் எரிபொருள் வரிசை யுகம் மலர்வதாகக் குற்றஞ்சாட்டியிருந்தனர்.
இதற்குப் பதிலளிக்கும் போதே பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் நாட்டில் எரிபொருளுக்கான தட்டுப்பாடு எதுவும் இல்லை எனக் குறிப்பிட்டார்.
இதேவேளை சபை முதல்வர் பிமல் ரத்நாயக்கவும் நாட்டில் எரிபொருளுக்கான தட்டுப்பாடு நிலவவில்லை எனவும், எரிபொருள் தட்டுப்பாடு உள்ளது போன்றதொரு பின்னணியை உருவாக்குவதற்கு முயற்சிப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.