அறிவியல் & தொழில்நுட்பம் செய்தி

செவ்வாய் கிரகத்தில் கண்டறியப்பட்ட பாறை – உயிர்கள் வாழ்ந்தமைக்கான அடையாளமா?

செவ்வாய் கிரகத்தில் பெர்செவரன்ஸ் (Perseverance), ஜெஸெரோ(Jezero)  பள்ளத்தில் ஃபிப்சாக்ஸ்லா (Phippsaksla) என்று அழைக்கப்படும் அசாதாரண பாறை ஒன்று கண்டறியப்பட்டுள்ளதாக நாசா  அறிவித்துள்ளது.

நாசாவின் பெர்செவரன்ஸ் செவ்வாய் ரோவரின் (Perseverance Mars rover) வழியாக இந்த பாறை கண்டறியப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தோராயமாக 31 அங்குல விட்டம் கொண்ட இந்தப் பாறை, பூமியின் மையத்தில் காணப்படும் இரும்பு-நிக்கல் ஆகிய தாது பொருட்களுடன்  தொடர்புடைய கூறுகளை கொண்டிருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை இந்த ஆண்டின் தொடக்கத்தில் பெர்செவரன்ஸ் (Perseverance), ஜெஸெரோ பள்ளத்தில் (Jezero) பழங்கால வறண்ட ஆற்றுப் படுகையின் மாதிரிகள் கண்டுறியப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய கண்டுப்பிடிப்புகள் செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் வாழ்ந்தமைக்கான  சாத்தியமான சமிக்ஞையாக கருதப்படுகிறது.

VD

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!