இலங்கை

கெஹலியவின் பதவி தப்புமா? : வாக்கெடுப்பு இன்று!

சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான  வாக்கெடுப்பு இன்று (08.09) நடைபெறவுள்ளது.

பாராளுமன்றம் இன்று காலை 9.30 மணிக்கு கூடும் என்றும் அது தொடர்பான வாக்கெடுப்பு மாலை 5.30 மணிக்கு நடைபெறும் என பாராளுமன்ற தகவல் தொடர்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.

சுகாதார அமைச்சருக்கு எதிரான இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை அண்மையில் ஐக்கிய மக்கள் சக்தி  உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்களால் முன்வைக்கப்பட்டது.

இதேவேளை, நேற்றைய தினம் விவாதத்தில் கலந்து கொண்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார, சுகாதார நெருக்கடியை மறைக்க நடவடிக்கை எடுக்கும் ஒவ்வொரு அரச அதிகாரிகளுக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருந்தார்.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!