இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவிற்கு உடல்நலக் குறைவா? – நாமல் விளக்கம்!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நல்ல உடல்நலத்துடன் இருப்பதாக அவரது மகன், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சமீபத்திய நாட்களில் சமூக ஊடகங்களில் தகவல்கள் பரவி வந்தன.
இந்நிலையில் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு வருகை தந்த அவருடைய மகனும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ மேற்படி கூறியுள்ளார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், சமூக ஊடகங்களில் யார் என்ன கூறினால் அவர் வீட்டில் நன்றாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
(Visited 25 times, 1 visits today)