ரஷ்யாவின் அணுசக்தித் தொழிலுக்கு ஆதரவளிக்கிறதா சீனா? – ஆராயும் அமெரிக்கா
யுரேனியத்தை இறக்குமதி செய்து அதன் சொந்த உற்பத்தியை ஏற்றுமதி செய்வதன் மூலம் ரஷ்யாவின் அணுசக்தித் தொழிலுக்கு சீனா ஆதரவளிக்கிறதா என்பதை அமெரிக்க அரசாங்கம் ஆராய்ந்து வருவதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் போருக்கு நிதியளிக்கும் ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் திறனை சீர்குலைக்கும் அமெரிக்க அரசாங்கத்தின் முயற்சிகளின் ஒரு பகுதியாக, கடந்த டிசம்பரில், அமெரிக்க சட்டமியற்றுபவர்கள் ரஷ்யாவிலிருந்து யுரேனியம் இறக்குமதிக்கு தடை விதித்தனர்.
ஆனால் தற்போது ரஷ்யா சீனா மூலம் அமெரிக்காவுக்கு யுரேனியம் சப்ளை செய்கிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
அமெரிக்க சர்வதேச வர்த்தக ஆணையத்தின் தரவுகளின்படி, அந்த மாதத்தில் சீனாவிலிருந்து அமெரிக்காவிற்கு யுரேனியம் ஏற்றுமதி 242,990 கிலோகிராமாக அதிகரித்துள்ளது.
2020 முதல் 2022 வரை சீனா அமெரிக்காவிற்கு யுரேனியத்தை கணிசமாக ஏற்றுமதி செய்யவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.