அரசியல் ஆயுதமாகிறதா மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலம்?
” நாடாளுமன்றத்தில் தமக்குள்ள மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலத்தை தேசிய மக்கள் சக்தி , அரசியல் ஆயுதமாக பயன்படுத்தாது.” – என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ Nalinda Jayatissa தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்றது.
இதன்போது சட்டமா அதிபர் விவகாரம் தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
“ சட்டமா அதிபரை ஜனாதிபதியால் நீக்க முடியாது. அது தொடர்பான பொறுப்பு நாடாளுமன்றத்துக்கே உள்ளது.
சட்டமாஅதிபர், பொலிஸ்மா அதிபர் ஆகியோரை பதவி நீக்குவதற்கு நடைமுறைகள் உள்ளன.
நாடாளுமன்றத்தில் எமக்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலம் இருந்தாலும் அநீதியான முறையில் அது பயன்படுத்தப்படமாட்டாது.” –எனவும் அமைச்சர் மேலும் கூறினார்.





