ஈராக்கில் வரலாற்றுச் சிறப்புமிக்க அல்-நூரி மசூதி மீண்டும் திறப்பு

ஈராக்கின் மொசூல் நகரத்தில் அமைந்துள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அல்-நூரி மசூதி, பொதுமக்களுக்கு திறக்கப்பட்டுள்ளது.
எட்டு ஆண்டுகளாக நடைபெற்ற புனரமைப்புப் பணிகள் முடிவடைந்ததைத் தொடர்ந்து, தற்போது மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
மசூதியின் புதிய திறப்பை ஈராக் பிரதமர் முகமது அல்-சூடானி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
இந்த மசூதி, 2014ஆம் ஆண்டு ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் மொசூல் நகரைக் கைப்பற்றியபோது, திட்டமிட்டவாறு இடிக்கப்பட்டு பெரிதும் சேதமடைந்தது.
பின்னர், யுனெஸ்கோ மற்றும் ஈராக்கிய தொல்பொருள் ஆணையம் இணைந்து, ஐக்கிய அரபு அமீரகத்தின் நிதியுதவியுடன், மசூதியை அதன் பாரம்பரிய வடிவத்தை சீரமைத்து மீட்டெடுக்கும் பணி தொடங்கப்பட்டது.
தற்போது அந்த பணி வெற்றிகரமாக முடிவடைந்து, மசூதி மக்கள் வழிபடும் வகையில் திறக்கப்பட்டிருக்கிறது
(Visited 1 times, 1 visits today)