இந்தியா

ஈரான் உச்ச தலைவர் மறைவு: இந்திய கிராமமொன்றில் 3 நாட்கள் துக்கம் அனுஷ்டிப்பு!

ஈரானின் முன்னாள் உச்ச தலைவர் அலி காமேனியின் மறைவுக்கு கர்நாடக மாநிலத்திலுள்ள கிராமமொன்றில் மூன்று நாட்கள் துக்கம் அனுஷ்டிக்கப்படுகின்றது.

அயத்துல்லா அலி காமேனி கர்நாடக மாநிலம் சிக்கபள்ளாப்பூர் மாவட்டத்தில் உள்ள அலிப்பூர் என்ற கிராமத்துக்கு இரு தடவைகள் வருகை தந்துள்ளார். 1980, 81 காலப்பகுதியிலேயே இவ்விஜயம் இடம்பெற்றது.

மேற்படி ஊரில் 30 ஆயிரத்துக்கும் அதிகமான ஷியா முஸ்லிம்கள் வாழ்வதால் அவர்களுக்காக சிறப்பு தொழுகை நடத்தினார்.

அவர் வந்து சென்ற பின்னர், ஈரான் அரசின் உதவியுடன் அலிப்பூரில் காமேனி பெயரில் வைத்தியசாலை நிர்மாணிக்கப்பட்டது. குறித்த வைத்தியசாலை தற்போதும் இயங்கிவருகின்றது.

அலிப்பூரை சேர்ந்தவர்களுக்கு ஈரானுடன் நெருங்கிய தொடர்பு ஏற்பட்டது. தற்போது 150 முதல் 200 பேர் வரை ஈரானில் பணியாற்றுகின்றனர்.

இந்நிலையில் காமேனியின் மறைவையொட்டி அலிப்பூரில் மக்கள் கருப்பு உடை அணிந்து ஊர்வலம் சென்றனர்.

இந்த ஊர்வலத்தின் போது அமெரிக்கா, இஸ்ரேல் அரசுகளுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.

3 நாட்கள் கடைகள் உள்ளிட்டவற்றை அடைத்து துக்கம் அனுசரிப்பதாகவும் வணிகர்கள் அறிவித்தனர். அங்குள்ள ஷியா முஸ்லிம்களின் கடைகள், வீடுகள் ஆகியவற்றில் கருப்பு கொடியும் ஏற்றப்பட்டுள்ளது.

Dila

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே
error: Content is protected !!