உலகம் செய்தி

மகளால் சர்ச்சையில் சிக்கிய ஈரானின் மூத்த பாதுகாப்பு அதிகாரி

ஈரானில் இஸ்லாமிய மத சட்டங்கள் கடுமையாக பின்பற்றப்பட்டு வருகின்றன. பெண்கள் மற்றும் 9 வயதிற்கு மேற்பட்ட சிறுமிகள் ஹிஜாப் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கடுமையான கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் 2022ம் ஆண்டு ஹிஜாப் சர்ச்சையால் காவல்துறையினர் நடத்திய தாக்குதலில் 22 வயது மாஷா அமினி (Masha Amini) என்ற பெண் உயிரிழந்தார்.

இது உலகளாவிய ரீதியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி ஈரானில் பலநாள் போராட்டங்களுக்கு வழிவகுத்தது. இப் போராட்டத்தின் போது பல பெண்கள் உயிரிழந்தனர்.

இந்நிலையில், தற்போது வெளியாகியுள்ள காணொளி மூலம் ஈரானின் உச்ச தலைவர் அயோதுல்லா அலி காமேனியின் (Ayatollah Ali Khamenei) அரசாங்கம் சர்ச்சையில் சிக்கியுள்ளது.

காமேனியின் நம்பிக்கைக்குரியவரும் ஈரானின் மூத்த பாதுகாப்பு அதிகாரி, அரசியல் ஆலோசகர் மற்றும் அந்நாட்டின் தேசிய பாதுகாப்பு கவுன்சிலை வழிநடத்தி சென்றவரான அலி ஷாம்கனியின் (Ali Shamkhani) மகளின் திருமணம் 2024ம் ஆண்டு நடைபெற்றது.

அதில், அலி ஷாம்கனியின் மகள் கைப்பகுதி மறைக்கப்படாத மற்றும் உடலின் முக்கிய பாகங்களை அரைகுறையாக மூடியபடி ஒரு ஆடையில் தோற்றமளித்துள்ளார்.

மேலும், ஷாம்கனியின் மனைவியும் முதுகு பகுதி மற்றும் பிற பகுதிகள் தெரியும் வகையிலான ஆடையை அணிந்துள்ளார்.

தற்போது வெளியாகியுள்ள இந்த காணொளி மூலம் ஷாம்கனி இரட்டை நிலைப்பாட்டை கொண்டுள்ளார் எனவும் நாட்டிற்கு ஒரு சட்டம் குடும்பத்திற்கு ஒரு சட்டம் என்றும் விமர்சகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

ஷம்கானி பெண்கள் மீது கடுமையான இஸ்லாமிய விதிகளை அமல்படுத்த வேண்டும் என்று வாதிட்டவர் மற்றும் போராட்டக்காரர்கள் மீது வன்முறை ஒடுக்குமுறைகளுக்கு உத்தரவிட்டவர்.

(Visited 1 times, 1 visits today)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி