ஈரான் அதிபர் தேர்தலுக்கான பணிகள் தொடங்கின
டெஹ்ரான்: ஹெலிகாப்டர் விபத்தில் இப்ராகிம் ரைசி இறந்ததை அடுத்து, ஈரானில் ஜூன் 28ம் திகதி நடைபெற உள்ள அதிபர் தேர்தலுக்கான பதிவை உள்துறை அமைச்சகம் தொடங்கியுள்ளது.
40 முதல் 75 வயதுக்குள் முதுகலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பதாரர்களாக இருக்கலாம்.
இருப்பினும், அனைத்து வேட்பாளர்களும் உச்ச தலைவர் அயதுல்லா கொமேனி தலைமையிலான 12 உறுப்பினர்களைக் கொண்ட கார்டியன் கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட வேண்டும்.
ஐந்து நாள் பதிவு காலம் செவ்வாய்க்கிழமையுடன் முடிவடைகிறது. கார்டியன் கவுன்சில் 10 நாட்களுக்குள் இறுதி வேட்பாளர் பட்டியலை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தேர்தலுக்கு முன் இரண்டு வாரங்கள் பிரசாரம் செய்ய அனுமதிக்கப்படும்.
(Visited 8 times, 1 visits today)