உலகம் செய்தி

ஈரானின் எண்ணை வயல்கள் அழிக்கப்படும் – அமெரிக்கா எச்சரிக்கை

ஈரான் இஸ்ரேல் மீது மேற்கொண்ட ஆக்கிரமிப்பு ரீதியான தாக்குதலுக்கு பதிலடியாக ஈரானின் எண்ணெய் வயல்கள் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

இவ்விடயமாக தான் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெநெட்டன்யாகுவுடன் கலந்துரையாடி உள்ளதாகவும் அவர் தெரிவித்ததாக outbound செய்திகளை ஆதாரங்கட்டி சர்வதேச ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன.

இஸ்ரேலுக்கு எதிரான தாக்குதலை அடுத்து என்ன நடக்கப் போகிறது என முழு உலகமும் விழித்திருக்கும் நிலையில் ஜோ பைடனின் இந்தக் கூற்று எதிர்வரும் தினங்களில் இஸ்ரேல் ஈரான் மீது அமெரிக்காவின் பூரண ஒத்துழைப்புடன் பழி தீர்க்கும் நடவடிக்கையில் ஈடுபடலாம் எனவும் போர் ஆய்வு வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

ஜோ பைடன் இக்கருத்தினை வெளியிட்டு சில மணித்தியாலங்களில் சர்வதேச சந்தையில் மசகு எண்ணை விலையில் திடீர் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை இஸ்ரேல் தொடர்ந்தும் லெபனானில் ஹிஸ்புல்லா நிலைகள் எனக்கூறி திட்டமிட்டு பொது மக்கள் குடியிருப்புகள் மீது தாக்குதல்கள் நடத்தியதில் கடந்த 24 மணி நேரத்தில்  கடமையில் ஈடுபட்டிருந்த 28 வைத்தியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

மேலும் கடந்த ஒரு வருடமாக இஸ்ரேல் லெபனான் மீது நடத்திய தாக்குதல்கள் காரணமாக 127 சிறார்கள் உட்பட 2000 பேர் கொல்லப்பட்டுள்ளனர்

9374 பேர் காயமடைந்துள்ளனர் என லெபனான் சுகாதார அமைச்சு தெரிவித்ததாக Outbound செய்தி வெளியிட்டுள்ளது.

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!