உலகம் செய்தி

ஈரானின் புதிய உச்ச தலைவரும் ‘குறிவைப்பு’!

ஈரானின் புதிய உச்ச தலைவர் நியமனத்துக்கு அமெரிக்காவின் ஒப்புதல் அவசியம் என டொனால்ட் ட்ரம்ப் Donald Trump மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

அவ்வாறு இல்லையேல் பதவிக்கு வருபவர் நீண்ட காலம் அப்பதவியில் நீடிக்க முடியாது என்றும் எச்சரித்துள்ளார்.

எனினும், வெளியக தலையீடின்றி ஈரான் Iran தனது புதிய உச்ச தலைவரை நியமித்துள்ளது என்று அந்நாட்டு அரச ஊடகம் தெரிவித்துள்ளது.

மறைந்த அயதுல்லா அலி காமேனியின் மகனான மொஜ்தபா காமேனியே Mojtaba Khamenei புதிய உச்ச தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

எனினும், இந்நியமனம் தொடர்பில் தனக்கு திருப்தி இல்லை என ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

ஈரானின் அணு ஆயுதக் கனவைத் தடுக்கவும் பிராந்திய பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் இந்த போர் அவசியம் எனக் கூறி, ஈரான்மீதான போரை அவர் நியாயப்படுத்தியுள்ளார்.

இந்நிலையில் புதிய தலைவரின்கீழ் ஈரான் Iran தாக்குதலை முன்னெடுத்துள்ளது என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

எனவே, ஈரானின் புதிய உச்ச தலைவரை இஸ்ரேல் மற்றும் அமெரிக்க படைகள் இலக்கு வைக்கலாம் என போர் நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அதேவேளை, ஈரான் உச்ச தலைவர் விவகாரமானது உள்நாட்டுப் பிரச்சினையெனவும், அதில் சர்வதேச தலையீடு இருக்கக்கூடாது எனவும் சீனா China தெரிவித்துள்ளது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!